மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி

கரூரில் மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்
கரூர்
Published on

கரூர்

எலக்ட்ரீசியன் பலி

கரூர் வேலுச்சாமி புரம் 4-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 38). எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணமாகி பிரகதீஸ்வரி (27) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கார்த்திக் சம்பவத்தன்று ரெட்டிப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் கரூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com