கிரகணம்

கிருஷ்ணா-‘கயல்’ சந்திரனுடன் 35 நாட்கள் இரவிலேயே படமாக்கப்பட்ட திகில் படம்!
கிரகணம்
Published on

கிருஷ்ணா, கயல் சந்திரன் ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ள கிரகணம் படத்தில், இளன் என்ற 21 வயது இளம் இயக்குனர் அறிமுகமாகிறார். கிரகணம் படத்தை பற்றி இவர் கூறுகிறார்:-

இந்த படத்தில் கிருஷ்ணா, கயல் சந்திரன் ஆகிய 2 கதாநாயகர்கள் இருக்கிறார்கள். நந்தினி என்ற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் கருணாஸ், ஜெயப்பிரகாஷ், கருணாகரன், கும்கி அஸ்வின் ஆகியோரும் நடித்துள்ளனர். 8 தோட்டாக்கள் படத்துக்கு இசையமைத்த சுந்தரமூர்த்தி இசையமைத்து இருக்கிறார். ஸ்ரீசரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.ஆர்.பிலிம்ஸ் சரவணன் தயாரித்து இருக்கிறார்.

2 கதாநாயகர்களும், கதாநாயகியும் ஒரு மணி நேரத்தில், தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகள்தான் படத்தின் கதை. திகில் படம் என்பதால் இரவு நேரத்தில் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதுவும் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை 5 மணி வரை படப்பிடிப்பு நடைபெற்றது. 35 நாட்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்து விட்டோம்.

படத்தில் 2 கதாநாயகர்கள் இருந்தாலும், ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் இல்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com