கிஷோர் கதைநாயகன் ஆனார்

"மஞ்ச குருவி" படத்தில் கிஷோர் நாயகனாக நடித்துள்ளார்.
கிஷோர் கதைநாயகன் ஆனார்
Published on

இன்றைய சமூக சூழலில், மாற்றங்கள் மட்டுமே மனிதனை நல்வழிப்படுத்தும் என்னும் கருத்தில், ஒருவன் தன்னை மாற்றிக் கொள்ள எதையெல்லாம் இழக்கிறான் என்ற கருவோடு, மஞ்ச குருவி படம் தயாராகி வருகிறது.

'வெண்ணிலா கபடிக்குழு', 'ஆடுகளம்', 'பொல்லாதவன்', 'வடசென்னை', 'ஹரிதாஸ்' ஆகிய படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்து பிரபலமான கிஷோர், 'மஞ்ச குருவி' என்ற படத்தில் கதைநாயகனாக நடிக்கிறார்.

இதுபற்றி அந்தப் படத்தின் டைரக்டர் அராங்கன் சின்னதம்பி கூறியதாவது:-

"புதுமுகங்கள் விஷ்வா, நீரஜா, கஞ்சா காருப்பு முக்கிய வேடங்களில் நடிக்க, குங்பு மாஸ்டர் ராஜநாயகம் வில்லனாக நடிக்கிறார்.

படத்துக்காக சென்னை அருகில் ஒரு பிரமாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு படப் பிடிப்பு நடந்தது. கிஷோர், ராஜநாயகம் மோதிய உச்சக்கட்ட சண்டை காட்சி படமாக்கப்பட்டது.

இந்தப் படத்துக்கு சவுந்தர்யன் இசையமைக்கிறார். விமலா ராஜநாயகம் தயாரிக்கிறார்."

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com