கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா இன்று தொடங்குகிறது.
கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா
Published on

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திருநங்கைகள் மட்டுமின்றி மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து திரளான திருநங்கைகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். இத்தகையை சிறப்பு வாய்ந்த விழா கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகள் விழா நடத்தப்படவில்லை.

இந்த நிலையில் கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து இந்தாண்டு கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு சாகை வார்த்தலுடன் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து தினந்தோறும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வீதிஉலா நடைபெற உள்ளது.

தேரோட்டம்

விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 19-ந்தேதி சுவாமி திருக்கண் திறப்பு, திருங்கைகளுக்கு தாலி கட்டுதல், 20-ந்தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.22-ந்தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா முடிவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக திருநங்கைகள் பலரும் கூவாகம் கிராமத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com