14 பேருக்கு கொரோனா

மேலும் 14 பேருக்கு கொரோனா
14 பேருக்கு கொரோனா
Published on

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்து கொண்டிருக்கிறது. நாள் ஒன்றின் பாதிப்பு 20-க்கும் குறைவாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் கோவை மற்றும் திருப்பூரில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 336 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 12 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 17 ஆயிரத்து 990 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 122 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 224 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com