அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு சிறந்த செயல் திட்டத்தை உருவாக்கிய அரசு பள்ளி மாணவிகளுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
Published on

புதுச்சேரி

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு தேவையான செயல் திட்டம் உருவாக்குவதில் புதுவை மாநில அளவில் 7 தனியார் பள்ளிகள் மற்றும் 2 அரசு பள்ளிகளின் செயல் திட்டம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதில் இந்திராநகரில் உள்ள இந்திராகாந்தி அரசு மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவிகள் நிரோஷா, தீபிகா ஆகியோர் உருவாக்கிய செயல் திட்டமும் ஒன்றாகும்.

தேசிய அளவில் சிறந்த செயல் திட்டத்தை உருவாக்கிய மாணவிகளுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளியின் துணை முதல்வர் சந்திரன் கலந்துகொண்டு மாணவிகள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியை அன்பரசி ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தார்.

மேலும் கவர்னர் மாளிகையில் நடந்த மாணவர்கள் திறன் அறிதல் நிகழ்ச்சியில் பங்கேற்ற இப்பள்ளி மாணவர் சிவராமு என்பவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் பொறுப்பாசிரியர் மணிமொழி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com