ரூ.7.7 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு

புதுவை லாஸ்பேட்டை கிருஷ்ணா நகர் மேற்கு பகுதியில் தனியாருக்கு சொந்தமான ரூ.7 கோடியே 70 லட்சம் மதிப்புள்ள காலிமனை தி.மு.க. நிர்வாகியிடமிருந்து மீட்கப்பட்டது.
ரூ.7.7 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு
Published on

புதுச்சேரி

புதுச்சேரி வெங்கட்டா நகரை சேர்ந்தவர் வைத்தியநாதன் (வயது 55). இவரது தாய் குப்புலட்சுமி. இவருக்கு சொந்தமான ரூ.7 கோடியே 70 லட்சம் மதிப்புள்ள காலிமனை லாஸ்பேட்டை கிருஷ்ணா நகர் மேற்கு பகுதியில் உள்ளது. அந்த இடத்தை உருளையன்பேட்டை முத்தமிழ் நகரை சேர்ந்த தி.மு.க. மாநில துணை அமைப்பாளர் குணா திலிப்பன் ஆக்கிரமித்தார். இது குறித்து குப்புலட்சுமி நில அபகரிப்பு பிரிவில் புகார் செய்தார்.

இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் தாசில்தார் ராஜேஷ் கண்ணா மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், குப்புலட்சுமியின் இடத்தை குணாதிலீபன் ஆக்கிரமித்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் அந்த இடம் குப்புலட்சுமிக்கு சொந்தமானது என மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். மேலும் இது தொடர்பான நோட்டீஸ் குணாதிலீபனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவர் அந்த நிலத்தை குப்புலட்சுமியிடம் ஒப்படைக்கவில்லை.

இதையடுத்து, உழவர்கரை தாசில்தார் ராஜேஷ் கண்ணன் முன்னிலையில் கிருஷ்ணாநகரில் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடம் மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com