கடலூரில் லாரி மோதி பெண் பலி

கடலூரில் லாரி மோதி பெண் உயிரிழந்தா.
கடலூரில் லாரி மோதி பெண் பலி
Published on

கடலூர்,

கடலூர் அருகே உள்ள குடிகாடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 45). இவரது மனைவி ஜெயந்தி (40). நேற்று மாலை பிரபாகரன் தனது மனைவி ஜெயந்தியுடன் மோட்டார் சைக்கிளில் கடலூரில் உள்ள கடைக்கு வந்தார்.

பின்னர் அவர்கள் இருவரும் மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர். கடலூர் இம்பீரியல் சாலையில் சிதம்பரம் மார்க்கமாக சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகில் சென்ற போது, பின்னால் வந்த டிப்பர் லாரி ஒன்று பிரபாகரன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய ஜெயந்தி, தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் பிரபாகரன் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கெண்டிருந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் பிரபாகரனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விரைந்து வந்து, பலியான ஜெயந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com