விபத்தில் சிக்கிய லாரி மீண்டும் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

வெள்ளகோவில் அருகே விபத்தில் சிக்கிய லாரி மீண்டும் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
விபத்தில் சிக்கிய லாரி மீண்டும் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
Published on

வி.மேட்டுப்பாளையம்,

வெள்ளகோவில் அருகே நேற்று முன்தினம் காலை காரும், பஞ்சு ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேர் பலியானார்கள். 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்தின் போது காரின் டீசல் டேங்க் வெடித்து, டீசல் சிதறியதில் பஞ்சு லாரி தீப்பிடித்து எரிந்தது. உடனே வெள்ளகோவில் தீயணைப்பு படை வீரர்களும் போலீசாரும் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதன்பின்னர் லாரியையும், காரையும் சாலையின் ஓரமாக தள்ளி விட்டு சென்று விட்டனர்.

இந்த நிலையில் அந்த பஞ்சு லாரி நேற்று மீண்டும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. லாரியில் பிடித்த தீயை முழுமையாக அணைக்காததால் மீண்டும் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com