லாவா அக்னி 2 ஸ்மார்ட்போன்

லாவா அக்னி 2 ஸ்மார்ட்போன்
Published on

லாவா நிறுவனம் புதிதாக அக்னி 2 என்ற பெயரிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது 6.78 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் அமோலெட் திரையைக் கொண்டுள்ளது.

இதில் மீடியாடெக் டைமென்சிடி 7050 எஸ்.ஓ.சி. பிராசஸர், மூன்றாம் தலைமுறை குளிர்விக்கும் தொழில்நுட்பம் உள்ளது. இதனால் போன் சூடேறுவது குறையும்.

இதில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் உள்ளது. 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்டது. பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. திரையிலேயே விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 4,700 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 66 வாட் சார்ஜருடன் வந்துள்ளது.

இதன் விலை சுமார் ரூ.21,999.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com