செயற்கை சூரியன்

ஜெர்மன் விண்வெளி ஆய்வாளர்கள் பலர் இணைந்து 149 சக்தி வாய்ந்த செனான் மின்விளக்குகளால் உலகின் மிகப்பெரிய சூரியனை உருவாக்கி உள்ளனர்.
செயற்கை சூரியன்
Published on

உலகிலேயே மிகப்பெரிய சூரியனை உதிக்க வைத்துள்ளனர், ஜெர்மனி அறிவியல் ஆய்வாளர்கள். சூரியனை விட 10 ஆயிரம் மடங்கு அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் இந்த செயற்கை சூரியன் ஜெர்மன் வின்வெளி மையத்தில் சோதனைக்கு பிறகு காட்சி படுத்தப்பட்டுள்ளது.

ஜெர்மன் விண்வெளி ஆய்வாளர் கள் பலர் இணைந்து 149 சக்தி வாய்ந்த செனான் மின்விளக்குகளால் உலகின் மிகப்பெரிய சூரியனை உருவாக்கி உள்ளனர். சூரிய எரிபொருள் உற்பத்தி பயன்பாட்டிற்கான இந்த சோதனை முயற்சி, வருங்காலத்தில் உலகின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி செய்யும் கூடமாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சூரிய எரிபொருள்களில் முக்கியமான ஹைட்ரஜன் உற்பத்தியை இந்த செயற்கை சூரியன் அதிகரிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஒரே ஸ்விட்சில் 3,000 டிகிரி செல்சியஸ் வெப்பம் தரும் இந்த செயற்கை சூரியன் சுற்றுச்சூழலை பாதிக்காத ஓர் ஆற்றல் உற்பத்தி மையமாகும். ஜெர்மனியை தொடர்ந்து சீனாவும், தென்கொரியாவும் செயற்கை சூரியன் உருவாக்கத்தில் முனைப்பு காட்டுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com