எல்.ஜி. 'அல்ட்ரா கியர்' வீடியோகேம் மானிட்டர் அறிமுகம்

எல்.ஜி. 'அல்ட்ரா கியர்' வீடியோகேம் மானிட்டர் அறிமுகம்
Published on

மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் எல்.ஜி. எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் வீடியோகேம் விளையாடுவோரின் எதிர்பார்ப்பு களுக்கு ஏற்ப புதிய மானிட்டரை அறிமுகப் படுத்தியுள்ளது. அல்ட்ரா கியர் என்ற பெயரில் வந்துள்ள இந்த மானிட்டர் 27 அங்குலம் மற்றும் 45 அங்குல அளவிலான ஓலெட் திரையைக் கொண்டுள்ளது.

இதில் நிவிட்யா ஜி சின்க் இணைப்பு வசதி, பிரிசின்க் பிரீமியம், வெசா அடாப்டிவ் சின்க் உள்ளிட்ட இணைப்பு வசதிகள் உள்ளது. இந்த மானிட்டரின் நான்கு புறமும் பிரேம் இல்லாததால் காட்சிகள் திரை முமுவதும் தெரியும். இதை சுவரில் மாட்டியும் பயன்படுத்தலாம். மேஜையில் வைத்து தேவையான கோணத்திலும் பயன்படுத்தலாம். இதன் எடை 7.35 கி.கி ஆகும். ஆர்.ஜி.பி. எல்.இ.டி. விளக்கும் உள்ளது.

27 ஆங்குல மானிட்டரின் விலை சுமார் ரூ.1.24,000.

45 அங்குல மானிட்டரின் விலை சுமார் ரூ,2,41,000.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com