

அனன்யா பாண்டே கூறும்போது, ஒருநாள் நாம் அழலாம். நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் வாழ்க்கையில் உறுதியாக இருக்க வேண்டும். மகிழ்ச்சியாக இருந்து வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். இந்த சின்ன வயசிலேயே நான் வேதாந்தம் பேசுவதாக நீங்கள் நினைக்கலாம். இதெல்லாம் என் அம்மா தாத்தாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டது.
நான் சினிமா பயணம் ஆரம்பித்தது அதிர்ஷ்டம். எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. மாலத்தீவுகள் இதர கடலோரப் பகுதிகளில் சூரிய உதயம், அஸ்தமன வேளைகளில் ரொம்பவும் அழகாக இருக்கும். இந்த டிஜிட்டல் யுகத்தில் சின்ன விஷயங்கள் கூட சில நொடிகளில் பல கோடி மக்களுக்கு தெரிந்துவிடுகிறது. பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது'' என்றார்.