திருமண ஆசைகாட்டி மைனர் பெண் கற்பழிப்பு; வாலிபருக்கு ஆயுள் தண்டனை- பெங்களூரு கோர்ட்டு தீர்ப்பு

திருமண ஆசைகாட்டி மைனர்பெண்ணை கற்பழித்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து பெங்களூரு கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
திருமண ஆசைகாட்டி மைனர் பெண் கற்பழிப்பு; வாலிபருக்கு ஆயுள் தண்டனை- பெங்களூரு கோர்ட்டு தீர்ப்பு
Published on

பெங்களூரு:

பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டியை சேர்ந்தவர் மது. இவர், ஒரு மைனர் பெண்ணை காதலித்து வந்துள்ளனர். அந்த பெண்ணை திருமணம் செய்வதாக மது கூறி இருந்தார். அத்துடன் மைனர் பெண்ணை தமிழ்நாட்டுக்கு அழைத்து சென்று மது கற்பழித்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் மைனர் பெண்ணை திருமணம் செய்யவும் மது மறுத்து விட்டார். இதுகுறித்து சி.கே.அச்சுக்கட்டு போலீஸ் நிலையத்தில் பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுவை கைது செய்தார்கள். விசாரணைக்கு பின்பு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை பெங்களூரு கோர்ட்டில் நீதிபதி ரூபா முன்னிலையில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி ரூபா தீர்ப்பு கூறினார். அப்போது மைனர் பெண்ணை காதலித்து, அவரை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மது கற்பழித்தது நிரூபணமாகி இருப்பதால், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com