கோவில் கோபுரம் மீது மின்னல் தாக்கியது; 4 சாமி சிலைகள் சேதம்

ஓமலூர் அருகே கோவில் கோபுரம் மீது மின்னல் தாக்கியது. இதில் 4 சாமி சிலைகள் சேதம் அடைந்தன.
கோவில் கோபுரம் மீது மின்னல் தாக்கியது; 4 சாமி சிலைகள் சேதம்
Published on

ஓமலூர்,

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி ராக்கிப்பட்டியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இந்த ஊரில் பெரியாண்டிச்சியம்மனுக்கு புதிதாக கோவில் கட்டப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில் காடையாம்பட்டி, ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடியுடன் பலத்த மழை பெய்தது. அப்போது ராக்கிப்பட்டி பெரியாண்டிச்சியம்மன் கோவில் கோபுரம் மீது மின்னல் தாக்கியது. இதில் கோபுரத்தில் இருந்த 4 சாமி சிலைகள் சேதம் அடைந்தன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com