

ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதிஷ்நாராயணன் மற்றும் போலீசார் காயல்பட்டினம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது காயல்பட்டினம் புதிய பஸ் நிலையம் அருகில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தபோது அவர் அரசு மதுபானத்தை அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது. விசாரணையில் அவர் ஓடக்கரையை சேர்ந்த சன்னியாசி மகன் பூலோகபாண்டி (வயது 52) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 11 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.