

ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி பஜாரில் அரசு அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் பஜாரில் உள்ள ஒரு பெட்டி கடையில் சோதனை நடத்தினார். அங்கு விற்பனைக்காக வைத்திருந்த 8 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கடை உரிமையாளர் வேல்முருகனை கைது செய்தனர்.