மது விற்றவர் கைது

சுசீந்திரம் அருக மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
மது விற்றவர் கைது
Published on

மேலகிருஷ்ணன்புதூர்,

சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கபிரியேல் மற்றும் போலீசார் நேற்று சுசீந்திரம் அருகே உள்ள ஆசிரமம் பாலம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் மது விற்ற முருகன் (வயது51) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதுபோல், சுசீந்திரம் அக்கரை பகுதியில் புகையிலை பொருட்களை விற்ற (57) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 5 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com