

உடையார்பாளையம்:
உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் மலரழகன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தத்தனூர் பொட்டக்கொல்லை கிராமத்தை சேர்ந்த மைனர்(வயது 45) என்பவர், அவருடைய வீட்டின் பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து மைனர் மீது வழக்குப்பதிந்த போலீசார், அவரை கைது செய்து அவரிடம் இருந்த 22 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.