மிலாது நபி தினத்தன்று மதுக்கடைகள் மூடல்

புதுவையில் மிலாதுநபி தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள் மூட கலால்துறை உத்தரவிட்டுள்ளது.
மிலாது நபி தினத்தன்று மதுக்கடைகள் மூடல்
Published on

புதுச்சேரி

புதுவை கலால்துறை துணை ஆணையர் மேத்யு பிரான்சிஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை யூனியன் பிரதேசத்தில் (வியாழக்கிழமை - 28 ம் தேதி) மிலாதுநபி தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு கலால்துறை ஆணையர் உத்தரவுப்படி புதுச்சேரி, காரைக்கால், மாகி, மற்றும் ஏனாம் பகுதியில் இயங்கி வரும் அனைத்து கள், சாராயம், பார் உள்பட அனைத்து வகை மதுக்கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார்கள் மூடப்பட்டிருக்கவேண்டும்.

அன்றைய தினத்தில் எல்லா கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது. மீறுபவர்கள் மீது புதுச்சேரி கலால் சட்ட விதிகள் 1970-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com