புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமிதரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா நாளை நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி நாளை (ஜன. 28 - புதன்கிழமை) புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com