லாரி டிரைவர் தற்கொலை

கோட்டுச்சேரி அருகே கடன் தொல்லையால் லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
லாரி டிரைவர் தற்கொலை
Published on

கோட்டுச்சேரி

நெடுங்காடு, காமராஜர் சாலை அகரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த அடைக்கலசாமி. லாரி டிரைவர். அவரது மனைவி அனிதா மேரி (வயது 38). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அடைக்கலசாமி வங்கியில் கடன் பெற்று லாரி ஒன்று வாங்கியுள்ளார். கடனை திருப்பி செலுத்த முடியாததால் வங்கி அதிகாரிகள் அந்த லாரியை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அடைக்கலசாமி நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய நிலையில் வரண்டாவில் உள்ள உத்திரத்தில் கைலியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெடுங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com