போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.
Published on

ராமநாதபுரம்,

திருவாடானை அருகே உள்ளது முள்ளிமுனை. இந்த ஊரை சேர்ந்த சமயலிங்கம் என்பவரின் மகள் சமயதேவி (வயது 21). காரங்காடு கிராமத்தைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவரின் மகன் கேட்வின் அக்விடேஸ் (22) என்பவரும் காதலித்து வந்தார்கள். இவர்கள் 2 பேரும் கடந்த 4-ந் தேதி வெளியூர் சென்று திருமணம் செய்து கொண்டார் களாம். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் நேற்று ராமநாதபுரம் நகர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கோரி தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வாலிபைர உறவினருடன் அனுப்பி வைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com