லூசிபர் 2 எம்புரான் - தீ தெறிக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

லூசிபரின் இரண்டாம் பாகம் 'லூசிபர் 2 எம்புரான்' என்ற பெயரில் உருவாகி வருகிறது. இப்படத்தின் திரைக்கதையை முரளி கோபி எழுதியிருக்கிறார்.
லூசிபர் 2 எம்புரான் - தீ தெறிக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
Published on

2019-ம் ஆண்டு நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான படம் 'லூசிபர்'. இப்படத்தின் மூலம் பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். இதில் நடிகர் மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் 'லூசிபர் 2 எம்புரான்' என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தை லைகா மற்றும் ஆசீர்வாத் சினிமாஸ் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் திரைக்கதையை முரளி கோபி எழுத, சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, தீபக் தேவ் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகிறது. இந்த நிலையில், லூசிபர் 2 எம்புரான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது. புதிய போஸ்டர் படத்திற்கான எதிர்பார்ப்பை பலமடங்கு அதிகரித்து இருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com