

இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சாய் பல்லவி, வரலட்சுமி ஆகியோர் நடித்து வருகிறார்கள். தற்போது மேலும் ஒரு கதாநாயகியாக வித்யா இணைந்திருக்கிறார்.
நடிகை வித்யா, இரவுக்கு ஆயிரம் கண்கள், பசங்க 2 படத்தில் நடித்துள்ளார். மாரி 2 நடிப்பதை வித்யாவே உறுதி செய்திருக்கிறார். இப்படத்தில் சாய் பல்லவி ஆட்டோ ஓட்டுநராகவும், வரலட்சுமி கலெக்டராவும் நடிக்கிறார்கள். மேலும் மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லனாக நடிக்கிறார். நடிகர் கிருஷ்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவு ஓம் பிரகாஷ்.