மீண்டும் நடிக்க தொடங்கிய மேக்னா ராஜ்

மறைந்த பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி மேக்னா ராஜ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய படத்தில் நடித்து வருகிறார்.
மீண்டும் நடிக்க தொடங்கிய மேக்னா ராஜ்
Published on

கன்னட திரை உலகில் பிரபல நடிகராக இருந்தவர் சிரஞ்சீவி சர்ஜா. இவரது மனைவி மேக்னா ராஜ். இவரும் பிரபல நடிகை ஆவார். நட்சத்திர தம்பதிகளான இவர்கள் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 2020-ம் ஆண்டு சிரஞ்சீவி சர்ஜா திடீரென மரணம் அடைந்தார். அப்போது மேக்னா ராஜ் கர்ப்பிணியாக இருந்தார். பின்னர் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

திருமண வாழ்க்கையில் புகுந்த மேக்னா ராஜ் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து முழுக்குப்போட்டார். இந்த நிலையில் குழந்தை பிறந்த பிறகு அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். தற்போது அவர் நடிப்பில் கன்னடத்தில் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது. இதுதொடர்பான புகைப்படங்களை மேக்னா ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com