செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் பராமரிப்பு

சலவை செய்யும்போது மெஷினுக்குள் துணிகள் நன்றாக சுழலக்கூடிய அளவுக்கு இடவசதி இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக டிரம்மில் துணிகளை திணித்தால் அவற்றில் உள்ள அழுக்கு போகாது. அதோடு நாளடைவில் சலவை இயந்திரமும் பழுதாகக்கூடும்.
செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் பராமரிப்பு
Published on

வாஷிங் மெஷின் எனும் சலவை இயந்திரம், தற்போது அனைத்து வீடுகளிலும் இருக்கக்கூடிய அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது. நேரத்தை மிச்சப்படுத்தி, வேலையை சுலபமாக்கக்கூடியதாக இருப்பதால் பெண்களிடையே இதற்கு மவுசு அதிகம். அதேசமயம் உங்களுடைய தேவைகளுக்கு ஏற்ற சலவை இயந்திரத்தை தேர்ந்தெடுத்து வாங்குவதில் கவனமுடன் இருக்க வேண்டும்.

தானியங்கி முறையில் செயல்படும் ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷினுடன் ஒப்பிடும்போது, செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் பலவகைகளில் பயன்தரக்கூடியது. இதைப் பயன்படுத்துவதால் மின்சாரத்தையும், தண்ணீரையும் மிச்சப்படுத்த முடியும். செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் வாங்கும் போதும், பயன்படுத்தும்போதும் கவனிக்க வேண்டிய குறிப்புகள் இதோ...

குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலும், ஒரு நாளில் துவைக்கப்படும் துணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தும் வாஷிங் மெஷினின் கொள்ளளவைத் தேர்வு செய்ய வேண்டும். 3 நபர்கள் கொண்ட குடும்பத்துக்கு 6 முதல் 6.5 கிலோ கொள்ளளவு கொண்ட மெஷினும், 4 முதல் 6 நபர்கள் கொண்ட குடும்பத்துக்கு 7 கிலோ கொள்ளளவு கொண்ட மெஷினும் வாங்கலாம். 7-க்கு மேற்பட்ட நபர்கள் கொண்ட குடும்பத்துக்கு 10 கிலோ கொள்ளளவு உடைய மெஷினும் ஏற்றதாக இருக்கும்.

சலவை செய்யும்போது மெஷினுக்குள் துணிகள் நன்றாக சுழலக்கூடிய அளவுக்கு இடவசதி இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக டிரம்மில் துணிகளை திணித்தால் அவற்றில் உள்ள அழுக்கு போகாது. அதோடு நாளடைவில் சலவை இயந்திரமும் பழுதாகக்கூடும்.

வாஷிங் மெஷினுக்குள் துணிகளை போடுவதற்கு முன்பு, பாக்கெட்டுகளில் வைத்திருக்கும் காகிதங்கள், பணம், நாணயங்கள் போன்ற அனைத்து பொருட்களையும் கவனமாக வெளியே எடுத்துவிட வேண்டும். இவை தண்ணீர் வெளியே செல்லும் குழாயில் அடைப்பை ஏற்படுத்துவதோடு, மெஷினில் உள்ள சிறிய பாகங்களை சேதப்படுத்தவும் வாய்ப்புள்ளது.

சலவை செய்யும்போது மெஷினுக்குள் அதிக கனமான ஜீன்ஸ் பேண்ட் போன்ற துணிகளை முதலில் போட வேண்டும். பிறகு லேசான துணிகளை அவற்றின் மேலே போட வேண்டும். அப்போதுதான் எல்லாத் துணிகளும் சுத்தமாக துவைக்கப்படும்.

தண்ணீரை பிழிவதற்கான டிரையர் பகுதியில் துணிகளை போட்டதும் பாதுகாப்பு மூடியை பொருத்த வேண்டியது அவசியமானது. இல்லையெனில் அதிகப்படியான அதிர்வால் டிரையர் டிரம் பழுதாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com