

நெல்லை,
இதுகுறித்து தென்னக ரெயில்வே மதுரை கோட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வாஞ்சி மணியாச்சி- நெல்லை பிரிவில் நாரைக்கிணறு- கங்கைகொண்டான் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
தாம்பரம்- நாகர்கோவில் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை மறுநாள் (சனிக்கிழமை), 23-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஆகிய நாட்களில் கோவில்பட்டி மற்றும் நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரை செல்லும் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் நாளை மறுநாள் (சனிக்கிழமை), 23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆகிய நாட்களில் நாகர்கோவில் மற்றும் கோவில்பட்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
திருச்சி- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை மறுநாள் (சனிக்கிழமை), 23-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வாஞ்சி மணியாச்சி மற்றும் திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
திருவனந்தபுரம்- திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை மறுநாள் (சனிக்கிழமை), 23-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) திருவனந்தபுரம் மற்றும் வாஞ்சி மணியாச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
திருச்செந்தூர்-தூத்துக்குடி பயணிகள் ரெயில் நாளை மறுநாள் (சனிக்கிழமை), 23-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஆகிய நாட்களில் கங்கைகொண்டான் ரெயில் நிலையத்தில் 20 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, தூத்துக்குடி ரெயில் நிலையத்துக்கு 45 நிமிடங்கள் தாமதமாக செல்லும்.
நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு புறப்பட வேண்டிய நெல்லை-ஜபல்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் மாலை 4.45 மணிக்கு புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.