தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம்

பழனி அருகே சாலையோர மரத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கிட்டு பிணமாக தொங்கினார்.
தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம்
Published on

பழனி :

பழனி அருகே உள்ள சுக்கமநாயக்கன்பட்டியில் சாலையோர மரத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதைக்கண்ட அப்பகுதி மக்கள் பழனி தாலுகா போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் பேலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

அதில் பிணமாக கிடந்தவர் வெள்ளை நிற சட்டை அணிந்திருந்தார். சிமெண்டு நிற வேட்டியால் தூக்கு மாட்டிய நிலையில் இருந்தார். பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசேதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com