ஏரிக்கரையில் ஆண் பிணம்

ஏரிக்கரையில் ஆண் பிணம் கிடந்தது.
ஏரிக்கரையில் ஆண் பிணம்
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் கால பைரவர் கோவில் சாலையில் லிங்கம்மா ஏரிக்கரை அருகில் 40 முதல் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் பிணம் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இது குறித்து வெங்கடாபுரம் கிராம நிர்வாக அலுவலர் சரவணன், கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போனவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com