

பழசிராஜா படத்துக்குப்பின் மம்முட்டி வரலாற்று படங்களில் நடிக்கவில்லை. சில வருட இடைவெளிக்குப்பின் அவர், மாமாங்கம் என்ற பெயரில் ஒரு வரலாற்று படத்தில் நடித்து இருக்கிறார்.
இந்த படத்தை பத்மகுமார் இயக்கியிருக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய 4 மொழிகளில் படம் தயாராகி இருக்கிறது. தமிழ் படத்துக்கான வசனத்தை டைரக்டர் ராம் எழுதியிருக்கிறார். டப்பிங்கின்போது அவர், மம்முட்டி அருகிலேயே இருந்து உச்சரிப்புகளை சரி செய்தாராம்.