வேதாரண்யம் அருகே சாராயம் பதுக்கி வைத்திருந்தவர் கைது

வேதாரண்யம் அருகே சாராயம் பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம் அருகே சாராயம் பதுக்கி வைத்திருந்தவர் கைது
Published on

வேதாரண்யம்,

வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வேதாரண்யத்தை அடுத்த ஆதனூர் ஊராட்சி அண்டர்கார்டு கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அவர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் அந்த பகுதியில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் அருகே ஒரு வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்தும், சாராய ஊறல் போட்டும் வைத்திருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார்(வயது45) என்பதும், இவர் தனது வீட்டின் அருகே விற்பனைக்காக 110 லிட்டர் சாராயம் மற்றும் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் சாராய ஊறலை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com