

பரமக்குடி
பரமக்குடியை சேர்ந்த ஒருவர் சமையல் மாஸ்டராக உள்ளார். அவர் மகால் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சமையல் ஆர்டர் எடுத்து குடும்பத்துடன் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுடன் அவர்களது 3 வயது பெண் குழந்தையும் இருந்துள்ளது. அந்த குழந்தை அங்குமிங்குமாக சென்று விளையாடிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து திடீரென அந்த குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. உடனே அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை தேடினர். அப்போது பாத்ரூமில் இருந்து அழுகை சத்தம் வந்தது. அங்கு சென்று பார்த்தபோது ஆசாமி ஒருவர் அந்த குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவனை பிடித்து வைத்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவன் எமனேசுவரம் முதலியார் தெருவை சேர்ந்த ரவீந்திரன்(வயது 50) என தெரியவந்தது. இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ரவீந்திரனை கைது செய்தனர்.