செம்பூரில் சிறுமியை மானபங்கம் செய்தவர் கைது- உத்தரபிரதேசத்தில் சிக்கினார்

மும்பை செம்பூரில் கடந்த 2020-ம் ஆண்டு சிறுமியை துன்புறுத்தி மானபங்கம் செய்தவர் கைது.
செம்பூரில் சிறுமியை மானபங்கம் செய்தவர் கைது- உத்தரபிரதேசத்தில் சிக்கினார்
Published on

மும்பை,

மும்பை செம்பூரில் கடந்த 2020-ம் ஆண்டு சிறுமியை சுபாஷ் சந்திர யாதவ் (வயது 21) என்பவர் துன்புறுத்தி மானபங்கம் செய்தார். இதுபற்றி சிறுமி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த முயன்றனர். அப்போது அவர் போலீசாரின் பிடியில் இருந்து தப்பி சென்று விட்டார். இதனால் அவர் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்தனர். மேலும் சிறப்பு கோர்ட்டு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.

இதனால் போலீசார் தப்பி சென்ற சுபாஷ் சந்திர யாதவை தேடி வந்தனர். விசாரணையில் உத்தரபிரதேச மாநிலம் பாதோகியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் அங்கு சென்று அவரை பிடித்து கைது செய்து மும்பை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com