பரமக்குடி கருப்பணசுவாமி கோவிலில் மண்டல பூஜை விழா

விரதம் இருந்த பக்தர்கள் முத்தையா கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பரமக்குடி கருப்பணசுவாமி கோவிலில் மண்டல பூஜை விழா
Published on

பரமக்குடி நகராட்சி பகுதி காட்டுப்பரமக்குடியில் உள்ள தாழை மதலை கருப்பணசாமி கோவிலில் கடந்த மாதம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மண்டல பூஜை விழா நடைபெற்றது. இதையொட்டி கருப்பணசாமி, சோனை கருப்பணசாமி, ராக்காச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

விரதம் இருந்த பக்தர்கள் முத்தையா கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வந்து சுவாமிகளுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்பு சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சிறப்பு தீபாராதனையும் நடந்தது.

இதில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com