மங்களூரு; லாரியில் மணல் கடத்திய 2 பேர் கைது

மங்களூரு அருகே லாரியில் மணல் கடத்திய 2 பேரை கைது செய்தனர்.
மங்களூரு; லாரியில் மணல் கடத்திய 2 பேர் கைது
Published on

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் கோடிக்கல் பகுதியில் லாரியில் ஆற்று மணல் கடத்துவதாக உருவா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் கோடிக்கல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக லாரி ஒன்று வந்தது. அதனை மறித்து போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது லாரியில் வந்த 2 பேர் தப்பியோடினர். அவர்களை போலீசார் துரத்தி சென்று பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள் உருவா பகுதியை சேர்ந்த அப்ரித், அப்துல் சத்தார் ஆகிய 2 பேர் என்பதும், லாரியில் சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் 10 டன் ஆற்று மணலை லாரியுடன் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து உருவா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com