சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு
Published on

சிவகங்கை

சிவகங்கை அருகே கீழப்பூங்குடி கிராமத்தில் உள்ள ஏழை காத்த அம்மன் கோவில் முளைப்பாரி விழாவையொட்டி 2-ம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி கிராமத்தார்கள் சார்பில் பூங்குடி கண்மாய் திடலில் நடைபெற்றது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மொத்தம் 12 காளைகள் கலந்து கொண்டன. இதேபோல் 9 பேர் கொண்ட மாடுபிடி வீரர்கள் மொத்தம் 108 வீரர்கள் கலந்து கொண்டனர். காளைகள் முட்டியதில் சில வீரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில் அங்கிருந்த மருத்துவ குழுவினர் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகளும், கேடயமும் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com