

சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே செல்லியம்பட்டியில் பொன்னழகி அம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
மஞ்சுவிரட்டு
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட செல்லியம்பட்டி கிராமத்தில் பொன்னழகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி நேற்று மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது. பொன்னழகி அம்மன் கோவில் காட்டில் தொழு அமைக்கப்பட்டு மஞ்சுவிரட்டு காளைகள் தொழுவத்தில் அடைக்கப்பட்டது.
சிங்கம்புணரி, கொட்டாம்பட்டி, பொன்னமராவதி, புதுக்கோட்டை, திருப்பத்தூர், காரைக்குடி போன்ற பகுதிகளிலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டு தொழுவத்தில் அடைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கிராமத்தின் சார்பில் கோவில் காளைக்கு முதல் மரியாதை செய்யப்பட்டு கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது.
ஏற்பாடு
இதைதொடர்ந்து வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளைகளாக ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் ஏராளமான காளைகள் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் சீறிப் பாய்ந்தன. விழாவிற்கான ஏற்பாடுகளை செல்லியம்பட்டி கிராமத்தினர் செய்திருந்தனர்.