பிரபல நடிகரை மாலை அணிவித்து வரவேற்ற மாரி செல்வராஜ்

பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் மாரி செல்வராஜ் பிரபல நடிகரை மாலை அணிவித்து வரவேற்றுள்ளார்.
பிரபல நடிகரை மாலை அணிவித்து வரவேற்ற மாரி செல்வராஜ்
Published on

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர், அடுத்ததாக தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். இப்படம் அனைவரின் மத்தியிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இதன்மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்த மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்கவுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், பிரபல மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

தற்போது 'மாமன்னன்' படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலுவை படக்குழு மாலை அணிவித்து வரவேற்த்துள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com