முன்னாள் முதல்-மந்திரியின் பேரனை மணக்கும் நடிகை மெஹ்ரின்

தமிழில் தனுஷ் ஜோடியாக பட்டாஸ் படத்தில் நடித்து பிரபலமானவர் மெஹ்ரின் பிரசிதா.
முன்னாள் முதல்-மந்திரியின் பேரனை மணக்கும் நடிகை மெஹ்ரின்
Published on

நெஞ்சில் துணிவிருந்தால். தமிழ், தெலுங்கில் வெளியான நோட்டா படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது அனில்ரவிபுடி இயக்கும் எப் 3 என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். காதலர் தினமான நேற்று பலர் தங்கள் காதலை வெளிப்படுத்தினர். நடிகை மெஹ்ரினும் பாவ்யா பிஸ்னோய் என்பவரை காதலிப்பதாக அறிவித்து உள்ளார். பாவ்யா பிஸ்னோய் அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர். இவர் மூன்று முறை அரியானா முதல்-மந்திரியாக பதவி வகித்த பஜன்லாலின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. பாவ்யாவின் தந்தை குல்தீப் பிஸ்னோய் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். பாவ்யாவும் அரசியல்வாதியாக இருக்கிறார். ஏற்கனவே காங்கிரஸ் சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். மெஹ்ரின்பாவ்யா பிஸ்னோய் திருமணத்தை ராஜஸ்தானில் உள்ள ஜெய்பூர் அல்லது ஜோத்பூர் அரண்மனையில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com