மாருதி சுஸுகி பிராங்ஸ் சி.என்.ஜி. அறிமுகம்

மாருதி சுஸுகி பிராங்ஸ் சி.என்.ஜி. அறிமுகம்
Published on

இந்தியாவில் கார்களை அதிகம் உற்பத்தி செய்யும் மாருதி சுஸுகி நிறுவனம் தனது பிராங்ஸ் மாடல் காரில் சி.என்.ஜி.யில் இயங்கும் சிக்மா மற்றும் டெல்டா என்ற இரண்டு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. சிக்மா காரின் விற்பனையக விலை சுமார் ரூ.8.42 லட்சம். டெல்டா காரின் விலை சுமார் ரூ.9.28 லட்சம். இது 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினைக் கொண்டுள்ளது. பெட்ரோல் மாடலை விட சி.என்.ஜி. மாடலின் விலை சுமார் ரூ.95,000 கூடுதலாகும். இந்த கார் 5 கியர்களைக் கொண்டுள்ளது.

இது 90 ஹெச்.பி. திறனையும், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையையும் வெளிப்படுத்தும். எரிபொருள் சிக்கனமாக வந்துள்ள இந்த கார் சோதனை ஓட்டத்தில் ஒரு கிலோ சி.என்.ஜி.க்கு 28.5 கி.மீ. தூரம் ஓடியதாக இந்நிறுவனம் தெரிவித் துள்ளது. 7 அங்குல தொடு திரை, ஸ்மார்ட் பிளே புரோ சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட் ரோல் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது. ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த 2 ஏர் பேக்குகள் உள்ளன.

2023 All Rights Reserved. Powered by Summit

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com