மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

சிவகிரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
Published on

சிவகிரி, மார்ச்:

மத்திய அரசின் புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி முதல் விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சிவகிரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கையில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் நடராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமசுப்பு, மருதையா, சுப்பையா, சுப்பிரமணியன், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் அமல்ராஜ், ஆட்டோ சங்க மாவட்ட துணைச் செயலாளர் சக்திவேல், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com