மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்

தென்காசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
Published on

தென்காசி:

தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசியில் பல்வேறு இடங்களில் வீடு இல்லாத ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார குழு செயலாளர் அயூப் கான் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் பாலபாரதி கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், செயற்குழு உறுப்பினர்கள் கணபதி, குணசீலன், வேல் முருகன், வேல்மயில், தங்கம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மாரியப்பன், சங்கரி, லெனின்குமார், கண்ணன், வன்னியபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com