கார் மோதியதில் படுகாயமடைந்த 5 குழந்தைகளின் தாய் சாவு

கார் மோதியதில் படுகாயமடைந்த 5 குழந்தைகளின் தாய் உயிரிழந்தார்
கார் மோதியதில் படுகாயமடைந்த 5 குழந்தைகளின் தாய் சாவு
Published on

கீரனூர்
கீரனூர் அய்யப்ப நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு கடந்த 17-ந் தேதி சவுரியாப்பட்டினத்தை சேர்ந்த சண்முகம்(வயது 39), வடிவேல் (35), ராஜேந்திரன் (23) ஆகிய 3 பேரும் ஒரு காரில் வந்தனர். அன்று மாலை 5 மணி ஆனதால் டாஸ்மாக் கடை பூட்டப்பட்டு இருந்தது. பின்னர் அவர்கள், அங்கு நின்றிருந்த பார் உரிமையாளர் முத்துக்குமார் (47) என்பவரிடம் மது கேட்டு தகராறு செய்ததுடன், அவர் கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்க சங்கிலியை அறுத்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு பொதுமக்கள் கூடியதால் அங்கிருந்து காரில் ஏறி தப்பி சென்றனர். காரை சண்முகம் ஓட்டினார். அப்போது அங்கு நின்றிருந்த கனகாம்பாள் (60) என்ற மூதாட்டி மீது கார் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த கனகாம்பாள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், காரில் தப்பிச் சென்ற 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். காரையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கனகாம்பாள் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதனையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த கீரனூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன கனகாம்பாளின் கணவர் பிச்சை ஏற்கனவே இறந்து விட்டார். 4 மகன்கள், 1 மகளுடன் வசித்து வந்த நிலையில் அவருக்கு இந்த துயரமான முடிவு ஏற்பட்டு விட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com