சிறந்த திருநங்கை விருது பெற விண்ணப்பிக்கலாம்

சிறந்த திருநங்கை விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்து உள்ளார்.
சிறந்த திருநங்கை விருது பெற விண்ணப்பிக்கலாம்
Published on

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

வருகிற ஏப்ரல் 15-ந்தேதி திருநங்கைகள் தினம் கொண்டாடப்படுவதை அடுத்து திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து முன் மாதிரியாக திகழும் திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் 2022-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கைக்கான விருதுவழங்கப்பட உள்ளது. இந்த விருதை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவருக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகைக்கான காசோலை மற்றும் பாராட்டுச்சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். இந்த விருது பெற விரும்புபவர்கள் அரசு உதவி பெறாமல் தனது வாழ்க்கையை கட்டமைத்துக்கொண்ட திருநங்கையாக இருத்தல் வேண்டும். மேலும் திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 திருநங்கைகள் தங்களது வாழ்வாதார ஆதரவைப் பெறவும், கண்ணியமான வாழ்க்கையை நடத்தவும் உதவி செய்திருக்க வேண்டும்.மேலும் விருதுக்கு விண்ணப்பிப்பவர் தமிழ்நாடு திருநங்கை நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது. இந்த விருது பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடைய திருநங்கைகள், https://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து விரிவான கருத்துருக்களை சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நாளை(28-ந்தேதி) மாலை 5 மணிக்குள் கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com