தொழிற்பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற ஏப்ரல் 30-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

தொழிற்பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற ஏப்ரல் 30-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்என்று மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்து உள்ளார்.
தொழிற்பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற ஏப்ரல் 30-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
Published on

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் 2022-2023-ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் தொடங்குதல், தொடர் அங்கீகாரம் பெறுதல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் தொடங்குவது மற்றும் தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள்; தொடங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உடையவர்கள் ஜனவரி முதல் வருகிற ஏப்ரல் 30-ந்தேதி முடிய www.skilltraining.tn.gon.in, என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் 2022-2023-ஆம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற் பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற் பிரிவுகள் கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரு விண்ணப்பத்தில் மட்டுமே அளிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம், ஆய்வுக்கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் ஆகியவை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை வருகிற ஏப்ரல் 30-ந்தேதிக்குள்அனுப்ப வேண்டும்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com