விராரில் மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை

விராரில் பகுதியை சேர்ந்த மெக்கானிக் நேற்று முன்தினம் மாலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
விராரில் மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

வசாய், 

பால்கர் மாவட்டம் விரார் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இரு சக்கர வாகன மெக்கானிக். இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, அவர் படுக்கை அறையில் கத்தியால் தனது கையை வெட்டிக்கொண்டார். பின்னர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி அறிந்த அவரது குடும்பத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் அங்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், வாங்கிய கடனை அடைக்க முடியாமல் போனதால் அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com