முந்திரி மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய மெக்கானிக்

முந்திரி மரத்தில் தூக்குப்போட்ட நிலையில் மெக்கானிக் பிணமாக தொங்கினார்.
முந்திரி மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய மெக்கானிக்
Published on

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி(வயது 50). இவருக்கு சுமதி என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். இவர் ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். சனிக்கிழமையன்று இவருக்கு விடுமுறை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற அவர், பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று ஜெயங்கொண்டத்தில் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தின் பின்புறம் முந்திரி தோப்பில் உள்ள முந்திரி மரத்தில் மர்மமான முறையில் ரவி தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com