கிணற்றில் மூழ்கி மெக்கானிக் பலி

கிணற்றில் மூழ்கி மெக்கானிக் பலி

நண்பர்களுடன் கிளாம்பாக்கத்தில் உள்ள விவசாய கிணற்றில் குளித்துகொண்டிருக்கும் போது திடீரென கிணற்றில் மூழ்கி மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார்.
Published on

சென்னை தியாகராயநகர் டாக்டர் தாமஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 22). மெக்கானிக். இவர் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே கிளாம்பாக்கத்தில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் சென்றார். பின்னர் தனது நண்பர்களுடன் கிளாம்பாக்கத்தில் உள்ள விவசாய கிணற்றில் குளித்துகொண்டிருக்கும் போது திடீரென கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் அருண்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com