ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி பூ வியாபாரி சாவு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி பூ வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி பூ வியாபாரி சாவு
Published on

பென்னாகரம்:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள எட்டியாம்பட்டியை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 57). பூ வியாபாரி. இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். முனிராஜ் நேற்று ஒகேனக்கல்லுக்கு சென்றார். பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த அவர் முதலைப்பண்ணை காவிரி ஆற்றில் குளித்தார். அப்போது அவர் காவிரி ஆற்றில் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஒகேனக்கல் போலீசார் விரைந்து சென்று முனிராஜின் உடலை மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com